சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி வரும் 'அரண்மனை 2' திரைப்படம் கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் முடியாத காரணத்தால் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது.
’அரண்மனை’யின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பேய் + காமெடி கூட்டணியில் 'அரண்மனை 2' படத்தைத் துவக்கினார் சுந்தர்.சி. அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை குஷ்பு தயாரித்து வருகிறார்
சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். முழுப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'அரண்மனை 2' படத்தின் உரிமையை கைப்பற்றி இருக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்தது.
இந்நிலையில், சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமையாக முடிவுபெறக் காரணத்தால் 'அரண்மனை 2' திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கி இருக்கிறது.
ஜனவரி 29ம் தேதி 'அரண்மனை 2' வெளியாகும் என்று தயாரிப்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.