தமிழ் சினிமா

தங்கமான மனிதர் விவேக்: விஜய் சேதுபதி இரங்கல்

செய்திப்பிரிவு

தங்கமான மனிதர் என்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

விவேக்கின் உடலுக்கு காலை முதலே பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் சேதுபதி பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:

"2019-ம் ஆண்டு விவேக் சாருடன் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் பணிபுரிந்தேன். மாரடைப்பு என்று சொன்னவுடனே, மீண்டும் வந்துவிடுவார் என நினைத்தேன். எனக்கும் அவர் வீட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 2004-ம் ஆண்டு கிச்சன் கான்சப்ட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த போது இங்கு மார்க்கெட்டிங்கிற்காக வந்துள்ளேன்.அதற்குப் பிறகு இப்போது தான் அவருடைய வீட்டுக்கு வருகிறேன். ஆனால், இப்படியான சூழலில் வருவேன் என எதிர்பார்க்கவில்லை. ரொம்ப தங்கமான மனிதர். அவருடைய புண்ணியங்கள் எல்லாம் சேர்ந்து காப்பாற்றி மீண்டும் வந்துவிடுவார் என முழுவதுமாக நம்பினேன்"

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT