தமிழ் சினிமா

நான்கு மொழிகளில் தயாராகும் ஸ்பெஷல் 26

ஸ்கிரீனன்

இந்திப் படமான 'ஸ்பெஷல் 26' தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பிரஷாந்த், அமண்டா நடிப்பில் தயாராகி இருக்கும் 'சாஹசம்' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது.

'சாஹசம்' படத்தைத் தொடர்ந்து 'இருபத்தியாறு 26' என்னும் படத்தில் நடிக்கவிருக்கிறார் பிரஷாந்த். இப்படம் இந்தியில் அக்‌ஷய்குமார் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக்காகும். 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள்.

சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நாசர், தம்பி ராமைய்யா, அபி சரவணன், ரோபோ சங்கர், ஜெய் ஆனந்த், பெசன்ட் நகர் ரவி, தேவதர்ஷினி என பலர் பிரஷாந்த்துடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். நாயகியாக நடிக்க முன்னணி நாயகியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கௌரவ வேடத்தில் தேவயானி மற்றும் சிம்ரன் நடிக்க உள்ளார்கள்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் 'இருபத்தியாறு' படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இப்படத்தில் பிரஷாந்துடன் ஒரு பாடலுக்கு இணைந்து நடனமாட இருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.

திரைக்கதை, வசனம் எழுதி மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார் தியாகராஜன். படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT