ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, தயாரித்துள்ள '99 சாங்ஸ்' படம் வெளியாகியுள்ளதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் '99 சாங்ஸ்'. ஏ.ஆர்.ரஹ்மான் கதைக்குத் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ஜியோ நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. '99 சாங்ஸ்' படத்தின் ப்ரிமீயர் காட்சி சென்னையில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்றது. அதில் சிம்பு, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக கதை எழுதி, தயாரித்திருப்பதால் அவருடன் பணிபுரிந்த இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் அவருக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்தும் விதமாக இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்றென்றும் உங்களுக்குச் சிறந்ததையும், உங்கள் படத்தின் வெளியீட்டுக்காகவும் உங்களை வாழ்த்துகிறேன் ரஹ்மான் ஜி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்"
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.