வெங்கட்பிரபு இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் 'சென்னை 28' படத்தின் நாயகர்கள் நடிக்க இருக்கிறார்கள்.
'மாசு (எ) மாசிலாமணி' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. இப்படத்தில் மீண்டும் தனது 'சென்னை 28' நாயகர்களோடு இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறார்.
'சென்னை 28' இரண்டாம் பாகம் கதையாக அல்லாமல், அதே நாயகர்களை வைத்து வேறு ஒரு கதை களத்தில் பயணிக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான கதை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்கு தான் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக இயக்குநர் வெங்கட்பிரபு அறிவித்திருந்தார். ஆகவே, இப்படத்தை அந்நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.