தமிழ் சினிமா

சாதி, மதத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு: விஜய் சேதுபதி

செய்திப்பிரிவு

கோடம்பாக்கத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே விஜய் சேதுபதி தனது வாக்கைச் செலுத்தினார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக விருதுநகரில் 41.79 சதவீதமும், குறைந்தபட்சமாக நெல்லையில் 32.29 சதவீதமும் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னணித் திரையுலக பிரபலங்கள் பலரும் காலை 7 மணிக்கே தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தார்கள். இதில் விஜய் சேதுபதி மதியம் 2:30 மணியளவில் கோடம்பாக்கத்தில் தனது வாக்கைச் செலுத்தினார்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விஜய் சேதுபதி. அப்போது, "வாக்களித்து விட்டேன். வாழ்க ஜனநாயகம். அப்புறம் கேளுங்கள்" என்று பேச்சைத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை எழுப்பினார்கள்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எல்லாம் எப்படி இருக்கின்றன?

நன்றாக உள்ளது.

ஏற்கெனவே சாதி, மதத்திற்கு எதிராக வாக்களியுங்கள் என்று சொல்லியிருந்தீர்கள். இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா?

அது 2019-ல் பேசியது. எப்போதுமே அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை மனிதர்கள்தான் முக்கியம். மனிதன்தான் இங்கு எல்லாமே.

சைக்களில் வந்து விஜய் வாக்களித்தது குறித்து?

அதெல்லாம் எதற்கு என்னிடம் கேட்கிறீர்கள். அவரிடம் கேளுங்கள்.

SCROLL FOR NEXT