சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ஒன்றில் பிரதான கதாபாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.
'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', 'இந்தியன் 2', 'பத்து தல', 'ஹரி - அருண்விஜய் படம்' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ப்ரியா பவானி சங்கர். மேலும், சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படங்களுக்கு இடையே, வெப் சீரிஸ் ஒன்றில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இதனை 'ஐரா' படத்தின் இயக்குநர் சர்ஜுன் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் நிருபராக நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
இந்த வெப் சீரிஸின் முதற்கட்டப் படப்பிடிப்பை ராமேஸ்வரத்தில் தொடங்கி முடித்துள்ளது படக்குழு. விரைவில் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் ப்ரியா பவானி சங்கருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிரிஷும் நடித்து வருகிறார்.
இந்த வெப் சீரிஸை இர்ஃபான் மாலிக் தயாரித்து வருகிறது. இது ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.