நடிகராக வலம் வரும் ஆர்.கே.சுரேஷ் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் வெளியான படம் 'தாரை தப்பட்டை'. இந்தப் படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமானவர் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆர்.கே.சுரேஷ். இந்தப் படத்துக்குப் பெரிதாக வரவேற்பு இல்லை என்றாலும், ஆர்.கே.சுரேஷுக்குப் பல்வேறு வாய்ப்புகள் வந்தன.
'மருது', 'இப்படை வெல்லும்', 'ஸ்கெட்ச்', 'காளி', 'நம்ம வீட்டுப் பிள்ளை', 'புலிக்குத்தி பாண்டி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் ஆர்.கே.சுரேஷ். சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்து, அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆர்.கே.சுரேஷ் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதற்காக 'குருபூஜை' எனத் தலைப்பிடப்பட்ட கதை விவாதப் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் 'குருபூஜை' படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது.