தமிழ் சினிமா

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார்

செய்திப்பிரிவு

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

'ராஜவம்சம்', 'எம்.ஜி.ஆர் மகன்', 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'பகைவனுக்கு அருள்வாய்', 'இரா.சரவணன் இயக்கும் படம்' ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார். இதனைத் தொடர்ந்து 'முந்தானை முடிச்சு 2' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

தற்போது 'முந்தானை முடிச்சு 2' படத்துக்கு முன்பாக சத்யசிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் சசிகுமார். இதன் படப்பிடிப்பு சென்னையில் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை 'ராஜவம்சம்' படத்தைத் தயாரித்துள்ள செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் சசிகுமார் யாருடன் நடித்து வருகிறார் என்பது உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

'கழுகு', 'கழுகு 2', 'சிவப்பு' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் சத்யசிவா. தற்போது 'பெல் பாட்டம்' கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கையும் அதே பெயரிலேயே சத்யசிவா இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT