தமிழ் சினிமா

டிசம்பர் வெளியீட்டில் வா டீல் படக்குழு மும்முரம்

ஸ்கிரீனன்

அருண்விஜய் நடித்திருக்கும் 'வா டீல்' படத்தை டிசம்பரில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தீவிர முய்ற்சி எடுத்துவருகிறது.

ரத்தினம் சிவா இயக்கத்தில் அருண்விஜய், கார்த்திகா, சதீஷ், வம்சி கிருஷ்ணா, நடன இயக்குநர் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'வா டீல்'. தமன் இசையமைத்த இப்படத்தை ஃபெதர் டச் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீடு உள்ளிட்ட அனைத்தையும் முடித்து பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்கள்.

இப்படத்தை முதலில் ஜே.எஸ்.கே நிறுவனம் வெளியிட முன்வந்தது. சரியான தேதியில் வெளியிடலாம் என்று காத்திருந்தார்கள். நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், தற்போது வெளியீட்டு உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனத்திடம் இருந்து திரும்ப பெற்றுவிட்டார்கள்.

தற்போது, பல்வேறு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனம்., நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் வெளியிட முடிவு செய்து பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT