தமிழ் சினிமா

2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள்: முழுப் பட்டியல் 

செய்திப்பிரிவு

67-வது தேசிய விருதுகள் நேற்று (22.03.21) அறிவிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இவை. கரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ‘அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும் ‘அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற படங்கள் மற்றும் கலைஞர்களின் முழுப் பட்டியல் இதோ:

தமிழ்

சிறந்த படம் அசுரன்

சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்

சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி

சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாக விஷால் (கேடி (எ) கருப்புதுரை)

சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

சிறந்த இசையமைப்பாளர் - இமான் (விஸ்வாசம்)

சிறப்பு ஜூரி விருது - ஒத்த செருப்பு

மலையாளம்

சிறந்த படம் - மரைக்காயர்

சிறந்த ஒப்பனை - ரஞ்சித் (ஹெலன்)

சிறந்த பாடலாசிரியர் - பிரபா வர்மா (கொலாம்பி)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - மரைக்காயர் (மலையாளம்)

சிறந்த ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு)

சிறந்த ஆடை வடிவமைப்பு - சுஜித் சுதாகரன், வி. சாய் (மரைக்காயர்)

சிறந்த அறிமுக இயக்குநர் - மதுகுட்டி சேவியர் (ஹெலன்)

இந்தி

சிறந்த திரைப்படம் - சிச்சோர்

சிறந்த இயக்குநர் - சஞ்சய் பூரண் சிங் செளகான்

சிறந்த நடிகர் - மனோஜ் பாஜ்பாய் (போஸ்லே)

சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (மணிகர்னிகா & பங்கா)

சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோஷி

சிறந்த பாடகர் - பி ப்ராக் (கேசரி)

சிறந்த குழந்தைகள் படம் - கஸ்தூரி

சிறந்த வசனம் - தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்

தெலுங்கு

சிறந்த பொழுதுபோக்குப் படம் - மஹரிஷி (தெலுங்கு)

சிறந்த படத்தொகுப்பு - நவீன் நூலி (ஜெர்ஸி)

சிறந்த நடனம் - ராஜு சுந்தரம் (மஹரிஷி)

சிறந்த தெலுங்குப் படம் - ஜெர்ஸி

SCROLL FOR NEXT