ஆர்டிஎம் இயக்கத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. வெற்றிமாறன், தனஞ்ஜெயன் இணைந்து வெளியிட்ட இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, காவல் துறை தொடர்பான இன்னொரு படத்தில் ஆர்டிஎம் - சுரேஷ் ரவி கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிய உள்ளது. பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்க உள்ள இப்படத்தின் முதல்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஜூன் அல்லது ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளனர். சென்னை, பாண்டிச்சேரி, கொடைக்கானலில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் காவல்துறை கதாபாத்திரத்தில் சுரேஷ் ரவி நடிக்க உள்ளார்.