சென்னையில் அண்மையில் நடைபெற்ற என்ஜாய் எஞ்சாமி பாடலின் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரைப் பிரபலங்கள். (கோப்புப் படம்) 
தமிழ் சினிமா

39 மில்லியனைக் கடந்த ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்: பாராட்டை அள்ளும் ‘மாஜா’ குழுவினர்

செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக தொடங்கியுள்ள மாஜா தளத்தில் முதல் பாடலாக வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் சர்வதேச அளவில் 39 மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து பிரபலமாகி வருகிறது. இப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக் கிறார்.

யூடியூப் தளத்தில் ஒரு பாடல் வெளியாகி 2 வாரங்கள் ஆகும் சூழலில் இந்த அளவுக்கு இசை ரசிகர்களால் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை.

ஒரு பாட்டி தனது பேரனுக்கு சொல்லும் கதைகளில் இருந்து எடுக்கப்பட்ட வரிகளின் பின்னணி யில் இப்பாடல் உருவாக்கப்பட்டது என்கிறார், அப்பாடலை எழுதிய அறிவு. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஒரு சுயாதீன கலைஞரின் வாழ்க்கை எப்பொழுதும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளான ரசிகர்களுடன் முடிந்துவிடும். ஆனால்,இன்றைக்கு இப்பாடல் அடைந்திருக்கும் இடம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்திற்கு பாடல் எழுதுவதற்கும், சுயாதீனமான பாடல்கள் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதுபோன்ற ஒருதளத்தை உருவாக்கியதற்காக ‘மாஜா’ தளத்துக்கும், அதன் மேற்பார்வையாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி.

சந்தோஷ் நாராயணன் ஒரு அரசியல் இசையமைப்பாளர், அவர் ஒரு பாடலை சாதாரணமாக இசையமைக்கமாட்டார். மிகவும் ஆழமாக சென்று, அதன் அடிநாதத்தை கண்டறிந்து இசையமைப் பார்.

“அதனால்தான் ‘என்ஜாய்’ என்ற தலைப்பில் இப்பாடல் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ‘எஞ்சாமி’ என்ற வார்த்தையானது, எனது பாட்டி அன்பாக பயன்படுத்தும் ஒருசொல். இவ்வாறு அவர் கூறினார்.

27 வயதான அறிவு ஒரு பாடகர், ராப்பர் மற்றும் பாடலாசிரியராகவும் பங்களிப்பை ஆற்றி வருகிறார்.

சந்தோஷ்நாராயணன் இசை யமைத்துள்ள இப்பாடலினை அறிவுடன் இணைந்து சந்தோஷ் நாராயணின் மகள் தீ பாடியுள்ளார். இயக்குநர்கள் செல்வராகவன், நலன்குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ்,சுதா கோங்கரா, நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் பலரும் இந்தப் பாடல் ஆக்கம் குறித்து தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வரு கின்றனர்.

SCROLL FOR NEXT