தமிழ் சினிமா

நடிகர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள்: கருணாஸ் தகவல்

செய்திப்பிரிவு

தீபாவளிப் பண்டிகையை முன் னிட்டு நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் கருணாஸ்.

நடிகர் சங்கத் தேர்தலில் வாக் களித்தவர்களுக்கு நன்றி தெரி விக்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட் டம் மணப்பாறையில் நேற்று நடை பெற்றது. இதில் பங்கேற்ற கரு ணாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:

நடிகர் சங்கத் தேர்தலில் வாக் களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி புதுக் கோட்டை, மதுரையைத் தொடர்ந்து மணப்பாறையில் நடத்தப்பட்டுள் ளது. வாக்குறுதியின்படி, நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவது தொடர் பான பணிகளை வேகமாக மேற் கொண்டுள்ளோம். நிலத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் முன்னாள் தலைவர் சரத்குமார், தற்போதைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்துவிட்டார்.

தீபாவளியை முன்னிட்டு சங்க உறுப்பினர்களுக்கு தலைவர், செயலாளர் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். மூத்த நடிகர்கள் தியாகராஜ பாகவதர், நாகேஷ், சந்திரபாபு, மனோரமா, பி.யு.சின்னப்பா, கிட்டப்பா உள்ளிட்டோரின் பிறந்த, நினைவு நாட்களில் ஆண்டு தோறும் மரியாதை செலுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT