இயக்குநர் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணியில் உருவான ‘த்ரிஷ்யம்’, மாபெரும் வரவேற்பை பெற்று, இதர மொழிகளிலும் ரீமேக் (தமிழில் ‘பாபநாசம்’) செய்யப்பட்டது. அதேபோல, தற்போது மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘த்ரிஷ்யம் 2’ படமும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை இதர மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. முதலாவதாக தெலுங்கு ரீமேக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கும் இப்படத் தில் வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மார்ச் 5-ல் தொடங்க உள்ளது. தொடர்ந்து தமிழ், இந்தி ரீமேக்கும் தொடங்கப்பட உள்ளன.
இதை ராஜ்குமார் சேதுபதி - ஸ்ரீப்ரியா, ஆன்டனி பெரும்பாவூர் தயாரிக்க உள்ளனர். 2-ம் பாகத்திலும் கமலை நடிக்கவைக்க பேச்சு நடக்கிறது. இதன் இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.