சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'மதகஜராஜா' படத்துக்கான பிரச்சினைகள் முடிவுற்றால், டிசம்பரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலெட்சுமி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மதகஜராஜா'. ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. 'கடல்' படத்தை விநியோக செய்த வகையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், 'மதகஜராஜா' வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
'மதகஜராஜா' படத்தை விஷால் வாங்கி வெளியிட முன்வந்தார். அப்போதும் 'கடல்' படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் பிரச்சினை பண்ணவே, பட வெளியீட்டை கைவிட்டார் விஷால்.
சுந்தர்.சி - விஷால் மீண்டும் இணைந்த 'ஆம்பள' படமும் வெளியானது. ஆனால் 'மதகஜராஜா' வெளியீடு குறித்து இருவரிடம் கேள்வி எழுப்பினால், "அது தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்" என்று பதிலளித்தார்கள்.
இந்நிலையில், ஜெமினி நிறுவனம் தங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் பேசி முடித்துவிட்டது. இந்தாண்டு இறுதிக்குள் 'மதகஜாராஜா' வெளியாகும் என தெரிகிறது. டிசம்பர் 11ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக படக்குழு தெரிவித்தது.