தமிழ் சினிமா

சமுத்திரக்கனியின் 'சங்கத்தலைவன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள 'சங்கத்தலைவன்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தலைவன்'. வெற்றிமாறன் மற்றும் உதயா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீடு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது கரோனா அச்சுறுத்தல் முடிந்து நிலைமை சீராகி வரும் நிலையில், பிப்ரவரி 26-ம் தேதி 'சங்கத்தலைவன்' வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. தணிக்கையில் இந்தப் படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

நீண்ட நாட்களாகத் தயாரிப்பிலிருந்த இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இதில் நடித்த நடிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். இந்தப் படத்தின் மூலமாகவே நாயகியாக ரம்யா அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT