தமிழ் சினிமா

பிரபுதேவாவுக்கு நாயகியாகும் ரம்யா நம்பீசன்: புதிய படம் தொடக்கம்

செய்திப்பிரிவு

ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கவுள்ளார்.

'மஞ்சப்பை', 'கடம்பன்' ஆகிய படங்களை இயக்கியவர் ராகவன். இந்தப் படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காகக் கதை எழுதி வந்தார். அதன் திரைக்கதை அமைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு நடிகர்களிடம் கதை சொல்லத் தொடங்கினார்.

இந்தப் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பது உறுதியானது. இதில் நாயகனாக நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமானார். இதனைத் தொடர்ந்து படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இன்று (ஜனவரி 27) படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதில் பிரபுதேவாவுக்கு நாயகியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் மாஸ்டர் அஸ்வந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக எஸ்.கே.செல்வகுமார், இசையமைப்பாளராக இமான், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன், எடிட்டராக ஷான் லோகேஷ், பாடலாசிரியராக யுகபாரதி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

SCROLL FOR NEXT