தமிழ் சினிமா

சிம்பு யாரையும் தவறாக பேசக்கூடாது: வடிவேலு அறிவுரை

செய்திப்பிரிவு

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான விஷயத்தில் சிம்பு யாரையும் தவறாக பேசக்கூடாது என்று வடிவேலு பேசினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் வடிவேலு பேசியதாவது:

''விஷால் நரி வேலை செய்கிறார் என்று சிம்பு பேசியது தவறு. சிம்பு நல்ல தம்பி. நல்ல பிள்ளை. யாரையும் தவறாக பேசக்கூடாது.

நடிகர் சங்கத் தேர்தலில் சமாதானம் செய்ய முயற்சிப்பதில் உள்நோக்கம் உள்ளது.

கமல் தூண்டிவிடுகிறார் என்று சரத்குமார் அணியினர் சொல்கிறார்கள். யாரும் யாரையும் தூண்டவில்லை. விஷால் அணி நடிகர் சங்க விவகாரத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

உண்மையைக் கண்டுபிடிக்கப் போகும் பாண்டவர் அணி எல்லா கலைஞர்களுக்கும் நல்லது செய்வார்கள். களவு போன நடிகர் சங்கத்தைக் கண்டுபிடிப்போம்'' என்று வடிவேலு பேசினார்.

SCROLL FOR NEXT