தமிழ் சினிமா

'அந்தாதூன்' தமிழ் ரீமேக்: முக்கியக் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார்

செய்திப்பிரிவு

'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'அந்தகன்' படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கவுள்ளார்.

இந்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், கார்த்திக் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கவுள்ளார். யார் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள் என்பதை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.

'அந்தகன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. இடைவெளியின்றி ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார்.

விரைவில் நாயகி உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது தெரியவரும்.

SCROLL FOR NEXT