தமிழ் சினிமா

'வலிமை அப்டேட்': முக்கியக் கதாபாத்திரத்தில் புகழ்?

செய்திப்பிரிவு

'வலிமை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் புகழ் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனிடையே, தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் 'வலிமை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புகழ், இதனை ஒரு வீடியோ பதிவில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் செல்லத் திட்டமிட்டது படக்குழு. வெளிநாடுகளில் கரோனா 2-வது அலை தீவிரமாகி வருவதால், வெளிநாட்டுப் படப்பிடிப்பே வேண்டாம் என்று 'வலிமை' படக்குழு முடிவு செய்துள்ளது.

'வலிமை' படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுதான், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT