தமிழ் சினிமா

100% பார்வையாளர்கள் அனுமதி: தமிழக அரசின் உத்தரவுக்கு சிவகார்த்திகேயன் நன்றி

செய்திப்பிரிவு

திரையரங்குகளில் 100 சதவித இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்கிற தமிழக அரசின் உத்தரவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில், இன்று இடைக்கால அறிவிப்பாக உரிய பாதுகாப்பு நடைமுறைகளைத் திரையரங்குகள் கடைப்பிடித்து 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ் சினிமா மீண்டும் சிறப்பாக இயங்கிட வழிவகுத்த தமிழக அரசிற்கு நன்றி. பொங்கலுக்கு வரும் #Master #Eeswaran இரண்டு படங்களும் பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்" என்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார், "திரையரங்குகளுக்கு 100 சதவித அனுமதி என்பதைப் பார்க்க அற்புதமாக இருக்கிறது. முதல்வர், அமைச்சருக்கு நன்றி" என்று ட்வீட் செய்துள்ளார்.

இது திரையுலகுக்கு மகிழ்ச்சியான புத்தாண்டு என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தப் பொங்கலிலிருந்து தமிழ்த் திரைத்துறை மீண்டும் உயிர்த்தெழும் என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் நன்றி கூறி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கங்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

SCROLL FOR NEXT