'அகிரா' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் மகேஷ்பாபுவை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்
சோனாக்ஷி சின்ஹா, இயக்குநர் அனுராக் கஷ்யாப், லட்சுமி ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'அகிரா' என்ற இந்திப் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இன்னும் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. மற்ற அனைத்து படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் வெளிவந்த 'மெளனகுரு' படத்தின் ரீமேக் தான் 'அகிரா' என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான முதற்கட்ட பணிகளையும் துரிதப்படுத்தி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார். மகேஷ்பாபு தமிழில் நடிக்கும் முதல் படமாக இப்படம் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். நாயகியாக சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை சமந்தா மறுத்திருக்கிறார்.
'அகிரா' பணிகள் முடிவடைந்தவுடன், மகேஷ்பாபு படத்தின் பணிகளை துவக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டு இருக்கிறார்