தமிழ் சினிமா

சீக்கிரம் சென்றுவிட்டாய் நண்பா: அருண் அலெக்ஸாண்டர் மறைவுக்கு நெல்சன் உருக்கம்

செய்திப்பிரிவு

சீக்கிரம் எங்களை விட்டுச் சென்றுவிட்டாய் நண்பா என்று அருண் அலெக்ஸாண்டர் மறைவுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல டப்பிங் கலைஞரும், திரைப்பட நடிகருமான அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பால் நேற்று (டிசம்பர் 28) காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'மாநகரம்', 'கோலமாவு கோகிலா', 'பிகில்', 'கைதி' உள்ளிட்ட படங்களில் அருண் அலெக்ஸாண்டர் நடித்துள்ளார். ஜனவரி 13-ம் தேதி வெளியாகவுள்ள 'மாஸ்டர்' படத்திலும் நடித்துள்ளார்.

அவரது மறைவு குறித்து நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நீங்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது மிகவும் துக்ககரமான விஷயமாக இருக்கிறது அருண். மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர். அற்புதமான மனிதர். சீக்கிரம் எங்களை விட்டுச் சென்றுவிட்டாய் நண்பா. உங்கள் இழப்பை உணர ஆரம்பித்துவிட்டேன்".

இவ்வாறு நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT