சசிகுமார் நடித்து வரும் 'பகைவனுக்கு அருள்வாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
அனிஸ் இயக்கத்தில் ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான படம் 'திருமணம் என்னும் நிக்காஹ்'. 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு, தற்போது தான் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் அனிஸ்.
டிசம்பர் 14-ம் தேதி படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி, நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 'பகைவனுக்கு அருள்வாய்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை 4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது 'பகைவனுக்கு அருள்வாய்' படக்குழு. இதனை சூர்யா, இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக கார்த்திக் கே.தில்லை, இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக காசி விஸ்வநாதன் ஆகியோர் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.