தனது ஓட்டை வேறு யாரோ போட்டு விட்டார்கள் என நடிகர் சுரேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பல நடிகர் நடிகைகள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் வாக்களிக்க வந்த நடிகர் சுரேஷ் பேசியதாவது, "ஹைதராபாத்தில் இருந்து போன் பண்ணும் போது, எனக்கு ஒட்டு இருக்கிறது என்றார்கள். அதனால் வந்தேன். உங்கள் ஒட்டு தபாலில் போடப்பட்டு விட்டது என்று சொன்னார்கள். அதிர்ச்சியாக இருந்தது. முன்பு சிவாஜி கணேசனுடைய ஒட்டையே யாரோ போட்டார்கள். நான் எம்மாத்திரம். பாண்டவர் அணி கண்டிப்பாக வெற்றி பெறும்" என்றார்.
நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் காலையிலிருந்து விறுவிறுப்பான ஒட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. 9:15 மணி நிலவரப்படி 600 ஒட்டுகள் பதிவாகி இருக்கிறது.
இதுவரை, நடிகர்கள் ரஜினி, விஜய், சுஹாசினி, ரேவதி, எஸ்.வி.சேகர், நிரோஷா, சிவகார்த்திகேயன், ராதிகா, கோவை சரளா, விஷால், விஜயகுமார், சுரேஷ், சீதா, குயிலி, அம்பிகா, ராதா, சங்கீதா, சரத்குமார், சோனா, ரமணா, கார்த்திக், கார்த்தி, கருணாஸ், ஜாக்குவார் தங்கம், பசுபதி, சமுத்திரக்கனி, சசிகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா, ராமராஜன், சத்யராஜ், சங்கர் கணேஷ், அருண்பாண்டியன், ராம்கி, விஷ்ணு, விதார்த், நகுல், முதல் மரியாதை ரஞ்சினி, அர்ச்சனா, ஜீவா, குஷ்பு, எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், கே.ஆர்.விஜயா, வியட்நாம் வீடு சுந்தரம் உள்ளிட்டோர் வாக்களித்துவள்ளனர்.