'மாரி' இரண்டாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் தனுஷ் தெரிவித்திருக்கிறார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் 'மாரி'. தனுஷ் மற்றும் ராதிகா சரத்குமார் இணை தயாரிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தனுஷ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் 'நானும் ரவுடிதான்' படத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது "மாரி 2 அல்லது வேலையில்லா பட்டதாரி 2" என்ற கேள்விக்கு "'மாரி' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்று தனுஷ் பதிலளித்திருக்கிறார். மேலும், "'வேலையில்லா பட்டதாரி' இரண்டாம் பாகம் பண்ண ஆசை தான். எப்படி, எப்போது?" என்று 'வேலையில்லா பட்டதாரி' இரண்டாம் பாகத்துக்கான கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
'மாரி' படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தான் இயக்குநரா, யார் தயாரிப்பாளர் உள்ளிட்ட எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை தனுஷ்.