ஆர்யா, அனுஷ்கா நடித்திருக்கும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ஜீவா.
பிரகாஷ் கோவேலமுடி இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. மரகதமணி இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.வி.பி சினிமாஸ் தயாரித்திருக்கிறது.
இன்று (அக்டோபர் 29) இப்படத்தின் இசை வெளியாகி இருக்கிறது. நவம்பர் 27ம் தேதி இப்படம் வெளியாகும் என பி.வி.பி சினிமாஸ் அறிவித்திக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா உடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. தெலுங்கில் ஜீவா வேடத்தில் நாகார்ஜூன் நடித்திருக்கிறார். கெளரவ பாத்திரம் என்றாலும், கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். ஏற்கனவே ஆர்யா நடித்த 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் கெளரவ வேடத்தில் ஜீவா நடித்திருந்தார்.
இப்படத்தின் பாத்திரத்துக்காக அனுஷ்கா தன் உடல் எடையை அதிகரித்து படப்பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் உடல் எடையை குறைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.