தமிழ் சினிமா

ரஜினி கருத்துக்கு சிம்பு வரவேற்பு

செய்திப்பிரிவு

யார் ஜெயித்து வந்தாலும் சரி, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை எடுத்துவிட்டு தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயரை வைக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை சிம்பு வரவேற்றுப் பேசினார்.

வாக்குப் பதிவு செய்ய வந்த நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''தேர்தலில் வாக்களித்துவிட்டேன். இத்தேர்தலில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரே குடும்பமாக செயல்பட்டு இருக்கலாம்.ஜனநாயக முறையில் தேர்தல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

அந்த வகையில் நான் சரத்குமார் சார் அணியைச் சார்ந்திருக்கிறேன். சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட அணி நடிகர் சங்கத்துக்கு நல்லது செய்வார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.

யார் ஜெயித்தாலும் நல்ல விஷயம் தான். எனக்கு நடிகர்களிடம் ஒற்றுமை தான் அவசியம்.

அனைவருமே தமிழ் படத்தில் தமிழில் பேசி தான் நடிக்கிறோம். ஆந்திரா உள்ளிட்ட திரையுலகினர் அனைவருமே இங்கு தான் படப்பிடிப்பு நடத்தினார்கள். திரையுலகம் முன்னேற்றம் அடைந்தவுடன் தனியாக போய்விட்டார்கள். அனைவருக்குமே தனியாக சங்கம் இருக்கிறது. மொழி, இனம் உள்ளிட்டவைக்காக மாற்றுகிறார்கள் என்பது எல்லாம் ஒன்றுமில்லை.

தமிழில் இருப்பவர்கள் தமிழ் நடிகர் சங்கம் என வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் ரஜினி சார். தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்வதை விட மண்ணின் மைந்தர்கள் யாருடைய பெயராவது வைக்கலாம் என்பது தன் தனிப்பட்ட கருத்து. அது இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றுவது நல்ல விஷயம் தான்'' என்று சிம்பு பேசினார்.

SCROLL FOR NEXT