தமிழ் சினிமா

சென்னையில் ரஜினி இன்று பிறந்தநாள் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் தனதுபிறந்தநாளை இன்று சென்னையில் கொண்டாடுகிறார்.

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும், அதற்கான அறிவிப்பைவரும் 31-ம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர், முன்னாள் மாநில நிர்வாகி சத்தியநாராயணன் உள்ளிட்ட சிலருடன் ரஜினி நேற்று 3 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தி னார். இதுதொடர்பாக கேட்டபோது, முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:

கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள், கட்சியின்கட்டமைப்பை பலப்படுத்துவது, நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. திமுக, அதிமுக கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் இணைய உள்ளனர். அதற்கான பேச்சும் நடந்து வருகிறது.

ரஜினி தனது பிறந்தநாளை டிச.12-ம் தேதி (இன்று)சென்னையில் கொண்டாடுகிறார். புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவரது பிறந்தநாளைக் கொண்டாடுமாறு நிர்வாகிகள், ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 14-ம் தேதிதொடங்குகிறது. இதற்காக, ரஜினி 13-ம் தேதி ஹைதராபாத் செல்கிறார். 31-ம் தேதிசென்னை வந்து, கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார். ஹைதராபாத் சென்று படப்பிடிப்பை முடித்துவிட்டு, முழுவதுமாக கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT