தமிழ் சினிமா

மீண்டும் நாயகனாக களமிறங்கும் 'உறியடி' விஜயகுமார்

செய்திப்பிரிவு

தனது உதவி இயக்குநர் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜயகுமார்.

'உறியடி' மற்றும் 'உறியடி 2' ஆகிய படங்களை இயக்கி, நடித்தவர் விஜயகுமார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடந்து விஜயகுமாரின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவியது. இதனிடையே, சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படத்துக்கு விஜயகுமார், வசனம் எழுதினார். அந்தப் படத்தின் வசனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் விஜயகுமார். இந்த முறை நாயகனாக மட்டுமே நடிக்கவுள்ளார். ஆக்‌ஷனை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தை விஜயகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அபாஸ் இயக்கவுள்ளார்.

ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 1990-ம் ஆண்டு தொடங்கி 2019-ல் முடிவது போன்று கதையை அமைத்துள்ளார் அபாஸ். இதில் விஜயகுமார் பல்வேறு கெட்டப்களில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, தான் அடுத்து இயக்கவுள்ள படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார் விஜயகுமார்.

SCROLL FOR NEXT