தமிழ் சினிமா

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

'நானும் ரவுடிதான்' படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன.

விஜய் சேதுபதியுடன் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வந்தது. கரோனா அச்சுறுத்தலால் அனைத்துப் பணிகளுமே நிறுத்தப்பட்டன.

தற்போது படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருவதால், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி எழுந்து வந்தது. இறுதியாக இன்று (டிசம்பர் 10) சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

SCROLL FOR NEXT