ருத்ரமாதேவி திரைப்படம் வெற்றிபெற வேண்டி, நடிகை அனுஷ்கா மற்றும் படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையானை நேற்று தரிசனம் செய்தனர்.
வரலாற்றுப் பின்னணியில் அதிக பட்ஜெட்டில் உருவாகி யுள்ள ‘ருத்ரமாதேவி’ நாளை உலகமெங்கும் திரையிடப்பட உள்ளது. இப்படத்தில் ருத்ரமா தேவியாக அனுஷ்கா நடித் துள்ளார். மேலும் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை குணசேகர் இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் வெற்றி பெற வேண்டி, நடிகை அனுஷ்கா, இயக்குநர் குணசேகர் மற்றும் படக்குழுவினர் நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்தனர்.
மேலும் இப்படத்தின் முதல் பிரதியை ஏழுமலையான் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
சுவாமி தரிசனத்துக்கு பின் அனுஷ்கா கூறும்போது, “இப்படம் வெகு சிறப்பாக அமைந்துள்ளது. படம் வெற்றி பெற ஏழுமலையானை வேண் டிக்கொண்டாம்” என்றார்.