தமிழ் சினிமா

கவுதம் கார்த்திக்கு நாயகியாகும் ஸ்ரீதிவ்யா

செய்திப்பிரிவு

கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுயோஸ் நிறுவனம் தயாரிப்பில் பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இதில் ரியோ, ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இதனிடையே பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தையும் பத்ரியே இயக்கவுள்ளார். இப்படத்தின் நாயகனாக கவுதம் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க ஆக்‌ஷன் பின்னணியில் இக்கதை உருவாகவுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ஸ்ரீதிவா ஒப்பந்தமாகி இருக்கிறார். 2017-ம் ஆண்டு வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்துக்குப் பிறகு எந்தவொரு தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் ஸ்ரீதிவ்யா. சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தில் ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகி இருப்பது நினைவு கூரத்தக்கது.

இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க, படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT