தமிழ் சினிமா

எந்திரன் 2 அப்டேட்: அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடத்திய படக்குழு

ஸ்கிரீனன்

ரஜினி நடிக்கவிருக்கும் 'எந்திரன் 2' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

'கபாலி' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. நாயகியாக தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ஷங்கர். விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார் என்கிறது தயாரிப்பு தரப்பு.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினி எதிராக முக்கிய பாத்திரத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் ஷங்கர். 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என்பதால், பெரிய நடிகர் நடித்தால் மட்டுமே அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு பணத்தை திருப்ப எடுக்க முடியும் என்று நினைக்கிறது லைக்கா நிறுவனம்,

ரஜினி எதிராக முக்கிய பாத்திரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விசாரித்த போது, "அர்னால்டிடம் படக்குழு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படலாம். ஆனால், பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதால் யார் என்பது இப்போது தெரிவிக்க முடியாது. அக்டோபர் மாதத்தில் படக்குழுவினர் ஒப்பந்தம் முழுவதும் முடிந்துவிடும்" என்று தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT