தமிழ் சினிமா

நாயகனாக அறிமுகமாகும் சாண்டி

செய்திப்பிரிவு

அறிமுக இயக்குநர் சந்துரு இயக்கத்தில் உருவாகும் படத்தின் நாயகனாக சாண்டி நடித்து வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அவருடைய பேச்சு, காமெடி ஆகியவற்றுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

தற்போது, திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் சாண்டி. அறிமுக இயக்குநர் சந்துரு இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ரேஷ்மா, ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் சாண்டியுடன் நடித்து வருகிறார்கள்.

முழுக்க நேரத்தை மையப்படுத்தி உருவாகும் ஹாரர் படம் இது. விரைவில் படத்தின் தலைப்பை முடிவு செய்து, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT