தமிழ் சினிமா

வார்த்தையால் சொல்ல முடியாத இழப்பு: கார்த்தி புகழாஞ்சலி

செய்திப்பிரிவு

பழம்பெரும் நடிகை மனோரமா மறைவு குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது:

வார்த்தையால் சொல்ல முடியாத இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். எப்படி பிறந்ததில் இருந்து அப்பா, அம்மாவை தெரியுமோ அதே போல ஆச்சியை நமக்கு தெரியும். அன்பானவங்க, யாரைப் பற்றியுமே ஒரு வார்த்தை தவறாக சொல்லாவதங்க.

என்னுடைய மகள் பெயர் வரைக்கும் அவங்களுங்கு தெரியும். பார்க்கும் போது எல்லாம் பெயர் சொல்லி நலம் விசாரிப்பார்கள். மனோரமா ஆச்சியின் சாதனைகளை யாராலும் நெருங்கக் கூட முடியாது. அவருடைய இடம் நிரப்பப் படமாலே இருக்கும். காமெடி, பாட்டு இப்படி அவங்க பண்ணாத விஷயங்களே இல்லை. எல்லா தலைமுறை நடிகர்கள் கூடவும் நடித்திருக்கிறார்கள். அவருடைய இழப்பு மிகப்பெரியது. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும்.

SCROLL FOR NEXT