தமிழ் சினிமா

விக்ரமுடன் பாலா பேச்சுவார்த்தை: மீண்டும் இணைய வாய்ப்பு

ஸ்கிரீனன்

விக்ரமிடம் தனது அடுத்த கதையின் கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் பாலா. விரைவில் இருவரும் இணைவார்கள் என தகவல்.

'சேது', 'பிதாமகன்' என விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பாலா. 'சேது' படம் தான் தற்போதைய விக்ரமின் வளர்ச்சிக்கு ஆரம்ப புள்ளி என்றால் அது மிகையல்ல. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்து படம் பண்ணவில்லை.

இந்நிலையில், விக்ரமை சந்தித்து தனது அடுத்த படத்தின் கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் பாலா. முழுக்கதையையும் சொல்லாமல், அப்பாத்திரத்தின் தன்மையை மட்டும் விக்ரமிடம் விளக்கியிருக்கிறார்.

இப்பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்புமே முழுவீச்சில் ஆர்வமாய் இருப்பதால், விரைவில் இணைந்து படம் பண்ணுவார்கள் என்கிறார்கள் திரையுலகில். ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தைத் தொடர்ந்து பாலா படத்தில் விக்ரம் நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT