தமிழ் சினிமா

சென்சாரில் U/A சான்றிதழ்: நவம்பர் 10ல் வெளியாகிறது தூங்காவனம்

ஸ்கிரீனன்

கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் தூங்காவனம்' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'U/A' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படம் நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தூங்காவனம்'. ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. படத்தின் ஒலிக்கலவையை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு சென்றார் இயக்குநர் ராஜேஷ். பின்னர், அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் அதிகாரிகளுக்கு 'தூங்காவனம்' திரையிட்டு காட்டப்பட்டது.

படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்த ஒரு இடத்தையும் நீக்கச் சொல்லாமல் 'U/A' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். 2 மணி நேரம் 5 நிமிடங்கள் ஒடிக்கூடிய படமாக அமைந்திருக்கிறது 'தூங்காவனம்'.

சென்சார் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இப்படத்தை வெளியிடும் எஸ்கேட் ஆர்டிஸ்ட் மதன் "நவம்பர் 10ம் தேதி முதல் 'தூங்காவனம்'" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

SCROLL FOR NEXT