தமிழ் சினிமா

கன்னடத்தில் ரீமேக்காகும் 'கடுகு': ராஜகுமாரன் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார்

செய்திப்பிரிவு

'கடுகு' திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ளது. ராஜகுமாரன் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார்.

2017-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வெளியான படம் 'கடுகு'. விஜய் மில்டன் இயக்கி, தயாரித்திருந்த இந்தப் படத்தில் பரத், ராஜகுமாரன், சுபிக்‌ஷா, பரத் சீனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டது. இந்தப் படத்துக்குப் பிறகு 'கோலி சோடா 2' படத்தை விஜய் மில்டன் இயக்கினார். அது போதிய வரவேற்பைப் பெறவில்லை.

சில தினங்களுக்கு முன்பு சிவராஜ்குமார் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளதை விஜய் மில்டன் உறுதி செய்தார். தற்போது அந்தப் படம் 'கடுகு' கன்னட ரீமேக் என்பது உறுதியாகியுள்ளது. அதில் ராஜகுமாரன் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார். நாயகியாக அஞ்சலி நடிக்கிறார். பரத் கதாபாத்திரத்தில் டோலி தனஞ்ஜெய் நடிக்கிறார்.

'கடுகு' படத்தின் கன்னட ரீமேக்கின் பூஜை இன்று (நவம்பர் 19) பெங்களூருவில் நடைபெற்றது. நவம்பர் 23-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

SCROLL FOR NEXT