தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி - ஆனந்த் கிருஷ்ணன் இணையும் கோடியில் ஒருவன்

செய்திப்பிரிவு

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படத்துக்கு 'கோடியில் ஒருவன்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

'ஆள்', 'மெட்ரோ' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆனந்த் கிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடிக்கும் 'ஆக்‌ஸிஜன்' படத்தை இயக்கி வந்தார். அந்தப் படம் பைனான்ஸ் பிரச்சினையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் புதிய படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். டி.ராஜா மற்றும் தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இப்படத்துக்கு 'கோடியில் ஒருவன்' எனத் தலைப்பிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

'கோடியில் ஒருவன்' படத்தில் விஜய் ஆண்டனிக்கு நாயகியாக ஆத்மிகா நடித்து வருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT