நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வாரம் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்தார். உடனடியாக விஜய், ‘‘எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. என் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் இணையக் கூடாது’’ என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று விஜய் தரப்பில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட அளவிலான புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதல் அறிவிப்பாக, மதுரை பொறுப்பாளர் மற்றும் தெற்கு பகுதி மாவட்ட தலைவராக தங்கப்பாண்டியும், வடக்குப் பகுதிக்கு மாவட்ட தலைவராக ஏ.கல்லாணையையும் நியமித்துள்ளனர்.
மேலும் இளைஞர் அணி தலைவர், தொண்டர் அணி தலைவர், மாணவர் அணி தலைவர் உள்ளிட்டஅமைப்பினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களுக்கும், அடுத்தடுத்து மாவட்டம்தோறும் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.