தமிழ் சினிமா

வில்லனாக அசத்தும் மகேந்திரன்: புகழும் அட்லீ-விஜய் படக்குழு

ஸ்கிரீனன்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில், வில்லனாக இயக்குநர் மகேந்திரனின் நடிப்பைப் பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் படத்தை தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முதல் முறையாக இயக்குநர் மகேந்திரன் வில்லனாக நடித்து வருகிறார். அவர் முதன் முறையாக நடிப்பதால் இந்த வில்லன் வேடம் எப்படி வரும் என்ற யோசனையில் இருந்தது படக்குழு.

இந்நிலையில், விஜய் - மகேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது காட்சிப்படுத்தி வருகிறார்கள். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் ஒரு டேக் அல்லது இரண்டு டேக்கிலே முடித்து விடுகிறாராம் மகேந்திரன்.

அதுமட்டுமன்றி, கண்டிப்பாக அடுத்த வருடம் நடைபெற இருக்கும் விருது வழங்கும் விழாவில், சிறந்த வில்லன் விருது கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT