தமிழ் சினிமா

குழந்தைகள் உங்கள் நண்பர்களாக இருக்க வேண்டும்: சூர்யா

செய்திப்பிரிவு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் விமான சேவை நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படம் இது. நவம்பர் 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் நேரடியாக வெளியாகிறது.

திரையுலகின் மார்க்கேண்டயன் என்று அறியப்படும் நடிகர் சிவகுமார், ஒழுக்கத்துக்கும், கண்டிப்புக்கும் பெயர் பெற்றவர். அவரது வளர்ப்பில் வளர்ந்த நீங்கள் இப்போது இருக்கும் பெற்றோருக்கு என்ன சொல்வீர்கள் என்று சூர்யாவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

இதற்கு, "குழந்தை வளர்ப்பில் அம்மா, அப்பா இருவரும் சமமான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். மனம் திறந்து பேசி அவர்களை உங்கள் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். இன்று அனைவருக்கும் மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றைப் பயன்படுத்த எளிதில் வாய்ப்பிருக்கும் நிலையில் குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள், யார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.

அவர்கள் வீட்டிலேயே இருக்கலாம், ஆனால், என்ன நடக்கிறது என்பது பற்றி உங்களுக்குத் தெரியாது. குழந்தைகள் உங்கள் நண்பர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்குச் சஞ்சலம் வரும்போது உங்களிடம் வருவார்கள்" என்று சூர்யா பதிலளித்துள்ளார்.

சூர்யா - ஜோதிகா ஜோடிக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் பெயரில்தான் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் என தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT