ரஜினி நடித்துவரும் 'கபாலி' படத்துக்காக பிரம்மாண்டமான தீ விபத்துக் காட்சி ஒன்றை, சென்னையில் படமாக்கி இருக்கிறார்கள்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கிஷோர், ருத்விகா, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து, படக்குழு மலேசியாவுக்கு சென்றிருக்கிறது. அங்கு சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
மலேசியாவுக்கு செல்லும் முன்பு சென்னையில் பிரம்மாண்டமான தீ விபத்துக் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறது படக்குழு. 200 துணை நடிகர்கள் பங்கேற்ற அக்காட்சியில் ஜான் விஜய், ஆர்.ஜே. ரமேஷ் உள்ளிட்ட சிலரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் மிக முக்கியமான கட்டத்தில் இக்காட்சி வரவிருக்கிறதாம்.