தமிழ் சினிமா

சரத்குமார் தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்: நடிகர் விஷால் அறிவிப்பு

செய்திப்பிரிவு

எங்கள் மீது சரத்குமார் தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று விஷால் அணியினர் தெரிவித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால், நாசர், கார்த்தி, கருணாஸ், எஸ்.வி.சேகர், பொன்வண்ணன், நந்தா, கோவை சரளா, ரோஹிணி, ராஜேஷ் மற்றும் சின்னத் திரை நடிகர்கள் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு சங்கத் தேர்தலை ஒட்டு மொத்த தமிழக மக்களும் உன்னிப்பாகக் கவனிக்கும் வகையில் மாற்றியதே, நடிகர் சங்கத் தேர்த லில் பாண்டவர் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி.

அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்தியே தேர்தலில் இத்தனை ஆண்டுகளாக தவறு நடந்து வந்த தாக தகவல் கிடைத்ததாலேயே, நாடக நடிகர்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதற்காக அனைத்து நாடக நடிகர்களையும் அவர்களது ஊர்களுக்கே சென்று சந்தித்து, சென்னைக்கு வந்து நேரடியாக வாக்களிக்குமாறு வலி யுறுத்தி வருகிறோம்.

நாடகக் கலைஞர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செய்வ தற்கு இந்தத் தேர்தலை சரியான சந்தர்ப்பமாகக் கருதுகிறோம்.

சினிமா துறையில் பல்வேறு சங்கங்களுக்கு அவ்வப்போது தேர்தல் நடைபெற்றுவரும் நிலை யில், எந்தவொரு சமரசத்துக்கும் இடமில்லை. தேர்தல் நடைபெற்றே தீரும் என்றனர்.

சங்கத்துக்குள்ளாக முடித்துக்கொள்ள வேண்டிய விவகாரத்தை வெளியுலகுக்கு வெளிப்படுத்தி விட்டதாக சிம்பு கூறிய கருத்துகுறித்து கேட்டபோது, “நடிகர் சங்கத்தில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் உறுப்பினர்கள் இருப்பதாலேயே ஊடகம் வாயிலாக வெளிப்படுத்த வேண்டிய தாகிவிட்டது” என்றனர்.

மற்றொரு கேள்விக்கு, “சரத் குமாருக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்தவொரு விரோதமும் இல்லை” என்றார் நடிகர் விஷால்.

வழக்கை சந்திப்போம்

பின்னர் புதுக்கோட்டையில் பாண்டவர் அணியினர் செய்தி யாளர்களிடம் பேசியபோது, “நடிகர் சங்கத்தில் வெளிப்படையான நிர்வாகம் இல்லை என்பதால்தான் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்கிறோம்.

சங்கத்தின் மீது அவதூறாக குற்றம் சுமத்தியதாக சரத்குமார் எங்கள் மீது தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம்” என்றனர்.

“எதிர் அணியினர் சூழ்ச்சி செய்தா வது மீண்டும் நிர்வாகத்தைக் கைப்பற்ற நினைக்கின்றனர்.

வாக்குக்கு ரூ.3,000 அன்பளிப்பு தருவதாகக் கூறி வாக்குகளை விலை பேசும் நிலையில் உள்ளனர்.

ஆனால், பாண்டவர் அணி வெற்றி பெற்றால், மாத ஓய்வூதியமாக ரூ.5,000 தர முடிவு செய்துள்ளோம்” என்று பாண்டவர் அணியினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT