தமிழ் சினிமா

'க/பெ. ரணசிங்கம்' இயக்குநருக்கு கார் பரிசு: தயாரிப்பாளர் வழங்கினார்

செய்திப்பிரிவு

'க/பெ. ரணசிங்கம்' இயக்குநருக்கு காரைப் பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் ராஜேஷ்.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'க/பெ ரணசிங்கம்'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் ஜீ ப்ளக்ஸில் இப்படம் வெளியானது.

விமர்சன ரீதியாக இந்தப் படம் கொண்டாடப்பட்டது. இயக்குநர் பாரதிராஜா, சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்கள்.

தற்போது, தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வருகிறார் இயக்குநர் விருமாண்டி. இந்நிலையில், 'க/பெ. ரணசிங்கம்' படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் இயக்குநர் விருமாண்டிக்கு காரைப் பரிசாக வழங்கியுள்ளார்.

இயக்குநர் விருமாண்டி தனது குடும்பத்தினருடன் சென்று ஷோரூமிலிருந்து காரை எடுத்துள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT