இரவு 10.35 மணி நேர நிலவரப்படி தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு 893 வாக்குகள் பெற்று சரத்குமார் முன்னிலையில் உள்ளார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு 1,109 வாக்குகள் பெற்று விஷால் முன்னிலையில் உள்ளார்.
பொருளாளர் அணிக்கான போட்டியில் கார்த்தி 754 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்றது.
இத்தேர்தலில் மொத்தம் 3139 பேர் ஓட்டு போட தகுதியுள்ளவர்கள். தபால் மூலமாக வாக்களிக்க 934 பேர் விண்ணப்பித்தார்கள். அவர்களுக்கு வாக்கு சீட்டுகள் அனுப்பப்பட்டு, அவர்களது வாக்குகள் தேர்தல் அதிகாரி பத்மநாபனுக்கு அனுப்பி வைத்தார்கள்.
தபால் ஒட்டுகள் மூலமாக 783 வாக்குகள் வந்திருக்கின்றன. அதில் 43 ஒட்டுகள் செல்லாதவை என்று தேர்தல் அதிகாரி ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்தார்.
தபால் ஒட்டுகள் போக மீதமுள்ள வாக்காளர்களில் 1, 824 பேர் நேரில் வாக்களித்தனர்.
மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், சிறிது நேரத்திலேயே ஒட்டு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேரடி வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்குகள் எண்ணும் பணிகளை வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.