'வலிமை' படப்பிடிப்புத் தளத்தில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து, தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் அஜித் பங்கேற்று நடித்து வருகிறார். எந்தவிதச் சிக்கலும் ஏற்படவில்லை என்றால், தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்திக்கொண்டே இருக்கலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, சமீபமாக அஜித் புகைப்படம் எதுவுமே வெளியாகாமல் இருந்தது.
தற்போது, ஹைதராபாத்தில் 'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஜித் ஃபிட்டாக இருக்கிறார், இன்னும் இளமை கூடியிருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சிலரோ அவருடைய இடது கையில் உள்ள காயத்தைப் பார்த்து, படப்பிடிப்பில் காயம்பட்டுள்ளது என ட்வீட் செய்து வருகிறார்கள்.
ஆனால், 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு எந்தவிதத் தடங்கலுமின்றி மும்முரமாக நடைபெற்று வருகிறது.