நடிகை பூனம் பாஜ்வா இன்ஸ்டாகிராமில் காதலருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார். இதன் மூலம் தன் காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
தமிழில் 'சேவல்' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. 'கச்சேரி ஆரம்பம்', 'தம்பிக்கோட்டை', 'ஆம்பள' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தனது காதலர் சுனில் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து பூனம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
"பிறந்த நாள் வாழ்த்துகள் சுனில் ரெட்டி. என் வேர்கள், என் நிலம், என் சிறகுகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த அழகான ஆணுக்கு, அழகான ஆன்மாவுக்கு, என் கூட்டாளிக்கு, வாழ்க்கைத் துணைக்கு, காதலனுக்கு, உடன் விளையாடுவபவனுக்கு, என் பிரம்மாண்ட, அதிசயமான கனவுகளை என்னுடன் சேர்த்து உருவாக்கியவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
அனைத்து மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், உற்சாகமும், காதலும், இன்றும் என்றும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வார்த்தைகளால் என்றும் விவரிக்க முடியாத அளவு நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று பூனம் பாஜ்வா பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவோடு இருவரும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பூனம் பகிர்ந்துள்ளார்.